காரைக்காலுக்கும் மாமல்லபுரத்துக்கும் இடையே புதுச்சேரி அருகே புயல் கரையை கடக்கும்: பாலச்சந்திரன்
By : King 24x7 Desk
Update: 2024-11-29 07:57 GMT
காரைக்காலுக்கும் மாமல்லபுரத்துக்கும் இடையே புதுச்சேரி அருகே புயல் கரையை கடக்கும் என பாலச்சந்திரன் பேட்டி அளித்துள்ளார். சென்னையில் தென் கிழக்கே 400 கி.மீ. தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது. வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 3 மணிநேரத்தில் புயலாக வலுப்பெறுகிறது. புயலாக வலுப்பெறாது என வானிலை மையம் தெரிவித்திருந்த நிலையில் இயற்கையில் திடீர் மாற்றம் என்று கூறியுள்ளார்.