தொட்டதற்கு எல்லாம் அரசியல் செய்ய நினைக்கிறார் அண்ணாமலை: செல்வப்பெருந்தகை
By : King 24x7 Desk
Update: 2024-12-27 07:11 GMT
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து, பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை இன்று கவன ஈர்ப்பு போராட்டத்தை நடத்தினார். வீட்டு வாசலில் சாட்டையால் சட்டை அணியாத உடலில் தனக்கு தானே அடித்துக் கொண்டார். இதுதொடர்பாக பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, தொட்டதற்கு எல்லாம் அரசியல் செய்ய நினைக்கிறார் அண்ணாமலை. நீதி நிலைநாட்டப்பட வேண்டும். யார் தவறு செய்தாலும் சட்டத்தின் முன்பு நிறுத்தப்பட வேண்டும். அண்ணா பல்கலைக்கழக மாணவிகளின் பாதுகாப்புக்கு நிர்வாகம் முழு பொறுப்பேற்க வேண்டும். எப்.ஐ.ஆர். தகவல்களை வெளியிட்டவர்கள் காவல்துறை அதிகாரிகளாக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் என்று கூறினார்.