அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம்: ஐகோர்ட்டில் இன்று விசாரணை!!
By : King 24x7 Desk
Update: 2024-12-27 07:02 GMT
gnanasekaran
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்க நீதிபதிகளுக்கு வழக்கறிஞர் வரலட்சுமி கடிதம் அனுப்பி உள்ளார். கடிதத்தை ஏற்று சூமோட்டோ வழக்காக விசாரிக்க நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், லட்சுமி நாராயணன் அமர்வு ஒப்புதல் அளித்துள்ளது. மாணவி வன்கொடுமை தொடர்பான சூமோட்டோ வழக்கை இன்றே விசாரிப்பதாக நீதிபதிகள் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.