மதுரை மற்றும் கடலூரில் காலணி தொழில் பூங்கா அமைக்கப்படும்: நிதியமைச்சர் தங்கம் தென்னரசு

Update: 2025-03-14 05:53 GMT
மதுரை மற்றும் கடலூரில் காலணி தொழில் பூங்கா அமைக்கப்படும்: நிதியமைச்சர் தங்கம் தென்னரசு

thangam thennarasu

  • whatsapp icon

தமிழக அரசு 2025-2026ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை அறிவித்துள்ளது. சட்டமன்றத்தில் நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டை அறிவித்தார். அதில், மதுரை மற்றும் கடலூரில் காலணி தொழில் பூங்கா அமைக்கப்படும் என தமிழ்நாடு பட்ஜெட்டில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். திருச்சியில் பொறியியல் தொழில் பூங்கா அமைக்கப்படும். ஓசூரில் ரூ.400 கோடியில் டைடல் பார்க் அமைக்கப்படும். இங்கு அறிவுசார் தொழில்நுட்ப வழித்தடமும் அமைக்கப்படும் என அவர் அறிவித்துள்ளார்.

Similar News