எந்த கொம்பனாலும் மேகதாதுவில் அணை கட்ட முடியாது : சட்டப்பேரவையில் அமைச்சர் துரைமுருகன் திட்டவட்டம்
By : King 24x7 Desk
Update: 2025-03-24 09:07 GMT
Duraimurugan
எந்த கொம்பனாலும் மேகதாதுவில் அணை கட்ட முடியாது என்று சட்டப்பேரவையில் அமைச்சர் துரைமுருகன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர், “தமிழ்நாட்டின் அனுமதி பெறாமல் மேகதாதுவில் அணை கட்ட முடியாது. வைகை-குண்டாறு இணைப்புத் திட்டத்தை நிச்சயமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றுவார். ரூ.374 கோடியில் 15 மாவட்டங்களில் 21 இடங்களில் தடுப்பணைகள் கட்டப்படும். மயிலாடுதுறை மாவட்டத்தில் கடைமடையில் ரூ.10 கோடியில் ஒரு நீரொழுங்கி கட்டப்படும்,”இவ்வாறு தெரிவித்தார்.