லால்குடி பேருந்து நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!!
By : King 24x7 Desk
Update: 2025-04-07 09:31 GMT

bomb threat
லால்குடி பேருந்து நிலையத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மர்ம நபர் தொலைபேசி மூலம் மிரட்டல் விடுத்தனர். வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் மோப்ப நாய் உதவியுடன் சோதனை நடத்தினர். வெடிகுண்டு நிபுணர்கள் நடத்திய சோதனையில் இது வெறும் புரளி என தெரியவந்துள்ளது. இருந்த போதும் தற்போது லால்குடி பேருந்து நிலையம் முழுவதும் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். தொலைபேசியில் தொடர்பு கொண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர் யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.