மீனவர் விவகாரத்தில் ஒன்றிய அரசு மனமிரங்காமல், கண் மூடி, காதுகளை அடைத்து வாய் மூடி மவுனித்திருக்கிறது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Update: 2025-04-07 13:11 GMT

CM Stalin

மீனவர் விவகாரத்தில் ஒன்றிய அரசு மனமிரங்காமல், கண் மூடி, காதுகளை அடைத்து வாய் மூடி மவுனித்திருக்கிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது; இன்னல்கள் பல எதிர்கொண்டு, கடல் அலைகளின் மேல் தங்களது உயிரும், வாழ்வாதாரமும் ஊசலாட, நாள்தோறும் வாழ்கின்றனர். தமிழ்நாடு சட்டமன்ற தீர்மானம் மீது மனம் இரங்காமல் ஒன்றிய அரசு மவுனித்திருக்கிறது. தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய மீனவர்கள்தான் நம் சொந்தங்கள் என்பதை ஒன்றிய பாஜக அரசு உணர வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

Similar News