கருப்பு சட்டை அணிந்து சட்டசபைக்கு வந்த அ.தி.மு.க.வினர்!!

admk
தமிழக சட்டசபையில் நேற்று மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து தமிழ்நாட்டு மீனவர் நலன் குறித்து 110 விதியின் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சில அறிவிப்புகளை வெளியிட்டார். அப்போது டாஸ்மாக் விவகாரம் குறித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேச அனுமதி கேட்டார். நீதிமன்றத்தில் உள்ள விவகாரம் குறித்து இங்கு விவாதிக்க அனுமதி கிடையாது என்று கூறி சபாநாயகர் அப்பாவு மறுப்பு தெரிவித்தார். இதையடுத்து சட்டசபையில் கடும் அமளியில் ஈடுபட்ட அ.தி.மு.க. உறுப்பினர்களை நேற்று ஒருநாள் சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் உத்தரவிட்டார். சட்டசபையில் இருந்து வெளியேறிய அ.தி.மு.க.வினர் எதிர்க்கட்சியினரை பேச சபாநாயகர் அனுமதிக்கவில்லை என குற்றம் சாட்டினர். இந்நிலையில் சபாநாயகரை கண்டிக்கும் வகையில் இன்று அ.தி.மு.க.வினர் கருப்பு சட்டை அணிந்து சட்டசபைக்கு வந்துள்ளனர். அ.தி.மு.க. பொதுச்செயலாளர், எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் கருப்பு சட்டை அணிந்து சட்டசபைக்கு வருகை தந்துள்ளனர்.