ஆளுநர் வழக்கில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பாகும்: பாமக நிறுவனர் ராமதாஸ்
By : King 24x7 Desk
Update: 2025-04-08 08:42 GMT
Ramadoss
ஆளுநர் வழக்கில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பாகும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார். “10 மசோதாக்களை அரசியலமைப்பு சட்ட 142 பிரிவை பயன்படுத்தி உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்தது வரவேற்கத்தக்கது. மாநில அரசுகள் இயற்றும் சட்டங்களை, ஆளுநர்கள் விருப்பம்போல கிடப்பில் போடும் நடைமுறைக்கு முடிவு கட்டப்பட்டுள்ளது” என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.