தமிழ்நாட்டின் சட்டப்போராட்டம் மீண்டும் ஒருமுறை நாட்டுக்கே ஒளி தந்துள்ளது: துணை முதல்வர்
By : King 24x7 Desk
Update: 2025-04-08 08:47 GMT

udhayanithi stalin
தமிழ்நாட்டின் சட்டப்போராட்டம் மீண்டும் ஒருமுறை ஒட்டுமொத்த நாட்டுக்கே ஒளியை கொடுத்துள்ளது என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். மசோதாவுக்கு ஒப்புதல் தராமல் ஆளுநர் தாமதப்படுத்தியதை எதிர்த்த வழக்கில் உச்சநீதிமன்றம் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு வழங்கியுள்ளது. 10 மசோதாக்களை ஆளுநர் ஜனாதிபதிக்கு அனுப்பியது சட்டவிரோதம், தவறானது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது வரவேற்கத்தக்கது.