ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக உச்சநீதிமன்ற தீர்ப்பு: ப.சிதம்பரம் வரவேற்பு!!
By : King 24x7 Desk
Update: 2025-04-08 13:43 GMT

ப. சிதம்பரம்
ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றம் அறிவித்துள்ள தீர்ப்பை வரவேற்கிறேன் என முன்னாள் ஒன்றிய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப் பேரவை நிறைவேற்றி, மீண்டும் வலியுறுத்திய, வரைவுச் சட்டத்திற்கு ஆளுனர் ஒப்புதல் மறுத்தது செல்லாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அரசியல் சாசனத்தில் ஆளுனரின் அதிகாரம் வரையறுக்கப்பட்டுள்ளது. அந்த வரம்பை மீறி ஆளுனர் செயல்பட்டது தவறு என்ற பல சட்ட வல்லுனர்கள் சுட்டிக் காட்டினர், ஆளுனர் பொருட்படுத்தவில்லை. ஆளுனரின் செயல்கள் அரசியல் சாசனப்படித் தவறு என்று ஆளுனரும் மத்திய அரசும் இப்பொழுதாவது உணர்ந்தால் மகிழ்ச்சி என்று குறிப்பிட்டுள்ளார்.