சிவாஜி இல்லத்துக்கு உரிமை கோர மாட்டேன்: ராம்குமார்
By : King 24x7 Desk
Update: 2025-04-08 13:44 GMT

ramkumar
நடிகர் சிவாஜி கணேசனின் அன்னை இல்லம் மீது எனக்கு எந்த உரிமையும் இல்லை என சிவாஜி கணேசன் இல்லத்தை ஜப்தி செய்ய உத்தரவிட்டது தொடர்பான வழக்கில் ராம்குமார் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தார். அன்னை இல்லத்தை தனது சகோதரர் பிரபுவுக்கு உயில் எழுதி வைத்துள்ளதால் தனக்கு எந்த உரிமையும் இல்லை என்றும் கூறினார். நடிகர் பிரபு மற்றும் தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் தரப்பு வாதங்களுக்காக வழக்கை ஐகோர்ட் ஏப்.15க்கு ஒத்திவைத்தது.