ஆதரவற்ற குழந்தைகள் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் சேர்க்க அனுமதி!!
By : King 24x7 Desk
Update: 2025-04-25 14:58 GMT
Chief Minister's Comprehensive Health Insurance Scheme
குழந்தைகள் நல மையங்களில் தங்கியுள்ள ஆதரவற்ற குழந்தைகளை முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் சேர்க்க தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது. வருமானச் சான்றிதழ், குடும்ப அட்டை இல்லாமல் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் சேர்க்க அனுமதி அளித்துள்ளது. 843 குழந்தைகள் நல மையங்களில் தங்கியுள்ள 15,092 குழந்தைகள் பயன் பெறுவர்.