அஜித் மரண வழக்கு: டிஎஸ்பியிடம் விசாரணை!!
By : King 24x7 Desk
Update: 2025-07-05 06:08 GMT
ajithkumar
திருப்புவனம் இளைஞர் அஜித் மரண வழக்கில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட டிஎஸ்பி சண்முகசுந்தரத்திடம் விசாரணை நடைபெற்று வருகிறது. மதுரை மாவட்ட நீதிபதி ஜான் சுந்தர்லால் முன்பு டிஎஸ்பி சண்முகசுந்தரம் விசாரணைக்கு ஆஜரானார். ஏடிஎஸ்பி சுகுமார், காவல் ஆய்வாளர் ரமேஷ்குமார், எஸ்.எஸ்.ஐ. சிவகுமாரிடம் நீதிபதி விசாரணை நடத்தி வருகிறார். நேற்று அரசு மருத்துவர் கார்த்திகேயன், ஆட்டோ ஓட்டுநர் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. மடப்புரம் கோயில் ஊழியர் அஜித்குமார் மரண வழக்கில் 4வது நாளாக மதுரை நீதிபதி விசாரணை நடத்தி வருகிறார். நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் 3 நாட்களில் இதுவரை 17 பேரிடம் விசாரணை நடத்தியுள்ளார்.