சட்டவிரோத கல்குவாரிகள் வழக்கு: ஆட்சியர், கனிமவளத்துறை இயக்குனர் பதில் அளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு
By : King 24x7 Desk
Update: 2025-08-14 10:18 GMT
மதுரை
தென்காசி மாவட்டத்தில் அதிக அளவில் சட்டவிரோத கல்குவாரிகள் செயல்படுவதாக ஐகோர்ட் மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டது. தென்காசி மாவட்ட கல்குவாரிகளை டிரோன் மூலம் ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுதாரர் எஸ்.ஜமீன் தலைமையில் வழக்கு தொடரப்பட்டது. மனு குறித்து தென்காசி ஆட்சியர், கனிமவளத்துறை இயக்குனர் பதில் அளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.