தீபாவளி பண்டிகை: சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு இன்று தொடக்கம்!!
By : King 24x7 Desk
Update: 2025-08-18 12:49 GMT
Train
தீபாவளி பண்டிகையை ஒட்டி சிறப்பு ரயில்களுக்காக டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்கியது. நடப்பாண்டு தீபாவளி பண்டிகை வருகிற அக்டோபர் மாதம் 20ம் தேதி (திங்கட்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்களின் வசதிக்காக சிறப்பு ரயில்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பயணிகள் கடைசி நேர அலைச்சலை குறைக்கும் வையில் சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு 120 நாட்களுக்கு முன்னதாவே தொடங்கிவிடும். அதன்படி இன்று தீபாவளி பண்டிகையையொட்டி சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு தொட்ங்கியது.