ஸ்ரீவில்லிபுத்தூர் : தவெக மாநாட்டிற்காக பேனர் வைக்கும்போது மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழப்பு!!

Update: 2025-08-20 08:03 GMT

tvk

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தவெக மதுரை மாநாட்டிற்காக பேனர் வைக்கும்போது மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாநாட்டை வரவேற்று பேனர் ஒன்றை தவெகவை சேர்ந்த இளைஞர்கள் அமைக்கும் பணியில் ஈடுபட்டிந்தபோது, பேனர் வைவைத்து கட்டுவதற்கான கம்பி ஒன்றை கல்லூரி மாணவர் காளீஸ்வரன் (19) என்பவர் எடுத்து வந்தார். எதிர்பாராத விதமாக கம்பி மீது மின்சாரம் தாக்கியதில், சம்பவ இடத்திலேயே காளீஸ்வரன் உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  

Similar News