மசோதாக்கள் மீது முடிவெடுப்பதற்கு காலக்கெடு இல்லையென்றால் ஏதாவது ஒரு நடைமுறை உருவாக்கப்பட வேண்டும்: உச்சநீதிமன்றம்
By : King 24x7 Desk
Update: 2025-08-21 10:48 GMT
மசோதாக்கள் மீது முடிவெடுப்பதற்கு காலக்கெடு இல்லையென்றால் ஏதாவது ஒரு நடைமுறை உருவாக்கப்பட வேண்டும். எவ்வளவு காலத்திற்கு முடிவெடுக்காமல் இருக்க முடியும் என உச்சநீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது. உச்ச நீதிமன்றம் அரசியலமைப்பின் ஒரு அங்கம், அரசமைப்பு பொறுப்பாளர்கள் சரியான காரணங்கள் இல்லாமல் பணிகளைச் செய்யவில்லை என்றால், நாங்களும் அதிகாரமற்றவர்கள் என்றும், கைகள் கட்டப்பட்டவை என்றும் கூற வேண்டுமா என குடியரசுத் தலைவர் வழக்கில் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது.