தமிழ்நாடு அரசு ஈட்டித் தரும் வரி வருவாய்க்கு ஏற்ப ஒன்றிய அரசு நிதிப் பகிர்வை வழங்குவது இல்லை :முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Update: 2025-08-23 06:49 GMT

CM Stalin

மத்திய, மாநில உறவுகள் குறித்த தேசிய கருத்தரங்கை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். சென்னை கலைவாணர் அரங்கில் கருத்தரங்கை தொடங்கி வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரையில், "திராவிட மாடல் ஆட்சியின் 4.5 ஆண்டுகளில் பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் திட்டங்களை நிறைவேற்றி வருகிறோம். தமிழ்நாடு அரசு ஈட்டித் தரும் வரி வருவாய்க்கு ஏற்ப மத்திய அரசு நிதிப் பகிர்வை வழங்குவது இல்லை.அளவுக்கு மீறிய அதிகார குவியல்களால் மத்திய அரசுக்கு ரத்த கொதிப்பும், மாநில அரசுகளுக்கு ரத்த சோகையும் ஏற்பட்டுள்ளது என்று பேசினார்.

Similar News