டி.ஜி.பி., சங்கர் ஜிவாலை தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை தலைவராக நியமிக்க ஒப்புதல்?
By : King 24x7 Desk
Update: 2025-08-25 04:02 GMT
Shankar Jiwal
தமிழக காவல் துறையின் படைத்தலைவர் மற்றும் சட்டம், ஒழுங்கு டி.ஜி.பி.,யாக சங்கர் ஜிவால், 2023 ஜூன், 30ம் தேதி பொறுப்பேற்றார். இவரது பதவிக்காலம், வரும், 31ம் தேதியுடன் முடிவடைகிறது. சங்கர் ஜிவால் ஓய்வு பெறுவதற்கான கோப்பில், முதல்வர் ஸ்டாலின் நேற்று முன்தினம் கையெழுத்திட்டு உள்ளார். ஓய்வுக்கு பின், சங்கர் ஜிவால், தமிழக காவல் துறையின் ஆலோசகராக நியமிக்கப்படுவார் என்று, கூறப்பட்டு வந்தது. இந்நிலையில், தமிழக அரசு, தீயணைப்பு துறையில் சீர்திருத்த பணிகளை மேற்கொள்ள உள்ளது. அதற்காக தீயணைப்பு துறை ஆணையம் ஒன்றை உருவாக்க உள்ளது. அதன் தலைவராக, சங்கர் ஜிவால் நியமிக்கப்பட உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.