சென்னை மாநகராட்சி சேவைகளை வாட்ஸ் ஆப் மூலம் மக்கள் பெறும் திட்டம் தொடக்கம்!!
By : King 24x7 Desk
Update: 2025-08-25 13:42 GMT
சென்னை மாநகராட்சி சேவைகளை வாட்ஸ் ஆப் மூலம் மக்கள் பெறும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் முதல்முறையாக சென்னை மாநகராட்சியில் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. 944 506 1913 என்ற வாட்ஸ் ஆப் எண் மூலம் மாநகராட்சி சேவைகளை மக்கள் பெற்றுக் கொள்ளலாம். மாநகராட்சியின் 32 சேவைகளை மக்கள் எந்தவித அலைச்சலும் இன்றி வாட்ஸ் ஆப் மூலம் இனி பெறலாம். குடிநீர் வழங்கல், பதிவுத்துறை சேவைகளை பெறும் வகையில் விரைவில் விரிவாக்கம் செய்யப்படவுள்ளது.