சர்வதேச கிரிக்கெட்டை தொடர்ந்து ஐபிஎல் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அஸ்வின் அறிவிப்பு!!
By : King 24x7 Desk
Update: 2025-08-27 07:15 GMT
Ravichandran Ashwin
சர்வதேச கிரிக்கெட்டை தொடர்ந்து ஐபிஎல் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அஸ்வின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். சென்னை அணிக்காக முதல்முறையாக ஐபிஎல் போட்டிகளில் களமிறங்கியிருந்தார் ரவிச்சந்திரன் அஸ்வின். அறிமுகமான சென்னை அணிக்காகவே தனது கடைசி போட்டியில் விளையாடியிருந்தார் அஸ்வின். ஒவ்வொரு முடிவும் ஒரு ஆரம்பம்; ஐபிஎல் வீரராக எனது நேரம் இன்றுடன் முடிவுக்கு வருகிறது என ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.