அதிவேகத்தில் பரவும் வைரஸ் காய்ச்சல்: மாஸ்க் அணிய சுகாதாரத்துறை அறிவுறுத்தல்

கடந்த 2 வாரங்களாக வைரஸ் காய்ச்சல் பரவல் அதிகரிப்பால் கூட்டம் அதிகமாக கூடும் இடங்களில் முகக்கவசம் அணியவேண்டுமென பொதுமக்களுக்கு சுகாதாரத்துறை அறிவுறுத்தப்பட்டுள்ளது.;

Update: 2025-09-02 15:57 GMT

mask

சென்னை, கோவை, மதுரை போன்ற முக்கிய நகரங்கள் உள்ளிட்ட மாநிலம் முழுவதும் கடந்த 2 வாரக் காலமாக வைரஸ் காய்ச்சலின் பரவல் சற்று அதிகரித்துள்ளது. இதன் எதிரொலியாகத் தமிழ்நாடு முழுவதும் பரிசோதனைகளைத் தமிழ்நாடு சுகாதாரத்துறை தீவிரப்படுத்தி வருகிறது. இந்நிலையில் கூட்டம் அதிகமாக கூடும் இடங்களில் முகக்கவசம் அணியவேண்டுமென பொதுமக்களுக்கு சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. காலநிலை மாற்றம், மழை பாதிப்பு உள்ளிட்ட காரணங்களால் தமிழ்நாடு முழுவதும் கடந்த 2 வாரங்களாக வைரஸ் காய்ச்சல் பரவிவருவதால், மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு செல்வோர் கவனமுடன் இருக்க வேண்டும் என்றும் சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. முதியவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவானவர்கள் மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு செல்வதை தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 

Similar News