எடப்பாடி பழனிசாமியை அமமுக தொண்டர்கள் ஏற்க மாட்டார்கள்: டிடிவி தினகரன்
By : King 24x7 Desk
Update: 2025-09-04 07:44 GMT
டிடிவி தினகரன்
இது குறித்து பேசிய டிடிவி தினகரன், எடப்பாடி பழனிசாமி திருந்துவார் என நம்பினோம். ஆனால் அது நடப்பதாகத் தெரியவில்லை. அமமுக தொண்டர்கள் இபிஎஸ்-ஐ ஒருபோதும் ஏற்க மாட்டார்கள். துரோகம் தலைவிரித்து ஆடுகிறது. தான் துரோகம் செய்தது சரி என்பது போல ஊர் முழுக்கச் சென்று ஆணவத்துடன் பேசி வருகிறார். அம்மாவின் தொண்டர்கள் இணைந்து ‘சரியான முதலமைச்சர் வேட்பாளரை' தருவார்கள் என இத்தனை காலம் பொறுமையாக இருந்தோம். அதற்கு வாய்ப்பில்லை எனத் தெரிந்துவிட்டது. அதனால்தான் நாங்கள் எங்கள் வழியில் செல்கிறோம். அமமுக தொண்டர்கள் இபிஎஸ்-ஐ ஒருபோதும் ஏற்க மாட்டார்கள் என டிடிவி தெரிவித்துள்ளார்.