எங்கள் கருத்துகளை ஏற்கும் மனநிலையில் எடப்பாடி பழனிசாமி இல்லை: செங்கோட்டையன்

Update: 2025-09-05 06:18 GMT

 Sengottaiyan

எங்கள் கருத்துகளை ஏற்கும் மனநிலையில் எடப்பாடி பழனிசாமி இல்லை என செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். வெளியே சென்றவர்களை இணைக்க வேண்டும் என பழனிசாமியிடம் நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தினோம். வெளியே சென்றவர்கள் எந்த நிபந்தனையும் இல்லை; எங்களை ஏற்றுக்கொள்ளுங்கள் என கோரிக்கை வைத்துள்ளனர். அதிமுக ஒருங்கிணைக்கப்பட வேண்டும் என்பதற்காக அதிமுக மூத்த தலைவர்கள் 6 பேர் எடப்பாடியிடம் பேசினோம். அதிமுகவில் இருந்து பிரிந்தவர்கள் ஒன்றிணைந்தால்தான் வெற்றி கிடைக்கும். அதிமுகவில் இருந்து பிரிந்தவர்கள் ஒன்றிணைந்தால்தான் வெற்றி கிடைக்கும். பிரிந்தவர்களை சேர்க்காவிட்டால், கட்சி ஒன்றிணைய வேண்டும் என்று விரும்புவர்கள் சேர்ந்து அதை செய்வோம் என அவர் கூறினார். மேலும், செங்கோட்டையன் பிரிந்தவர்களை இணைக்க 10 நாட்கள் காலக்கெடு விதித்துள்ளார்.

Similar News