தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் மீது பாய்ந்தது வழக்கு!!

Update: 2025-09-08 15:32 GMT

bussy anand

தவெக பொதுச்செயலாளர் ஆனந்த், திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் குடமுருட்டி கரிகாலன் உள்ளிட்ட 6 பேர் மீது திருச்சி விமான நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அனுமதியின்றி கூடுதல், போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. திருச்சி விமான நிலையம் எதிரே உள்ள பிள்ளையார் கோயிலில் சாமி தரிசனம் செய்தபோது போக்குவரத்துக்கு இடையூறாக வாகனம் நிறுத்தி போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக ஆனந்த் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். 

Similar News