சிலைக்கடத்தல் வழக்கில் வெளியுறவுத்துறை, கலாச்சாரத் துறையை சேர்த்து உச்சநீதிமன்றம் உத்தரவு!!

Update: 2025-09-16 10:24 GMT

supreme court

சிலைக்கடத்தல் வழக்கில் வெளியுறவுத்துறை, கலாச்சாரத் துறையை சேர்த்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வெளிநாட்டுக்கு சிலைகள் கடத்தப்பட்டிருப்பதால் ஒன்றிய அரசையும் எதிர்மனுதாரராக சேர்த்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. சிலைக்கடத்தல் வழக்கில் ஆவணங்கள் காணாமல் போனது எப்படி என்று தமிழ்நாடு அரசுக்கும் கேள்வி எழுப்பப்பட்டது. 38 காவல் நிலையங்களிலும் ஒரே நேரத்தில் தீ விபத்து ஏற்பட்டு கோப்புகள் அழிந்துவிட்டனவா? என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். சிலைக்கடத்தல் வழக்கு ஆவணங்கள் காணாமல் போனது பற்றி தமிழ்நாடு அரசு விளக்கமளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. தமிழ்நாடு அரசு விளக்கமளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நவம்பர். 1 1ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.

Similar News