செங்கோட்டையனுக்கு தவெக-வில் என்ன பதவி தெரியுமா?
By : King 24x7 Desk
Update: 2025-11-28 03:50 GMT
விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ள செங்கோட்டையனுக்கு அக்கட்சியின் உயர்மட்ட மாநில நிர்வாகக் குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இதுக்குறித்து விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், செங்கோட்டையன் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 28 பேர் கொண்ட எனது கண்காணிப்பில் இயங்கும் கழக உயர்மட்ட மாநில நிர்வாகக் குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்படுகிறார். இவர் இக்குழுவை வழிநடத்தி கழகத்தின் அரசியல் செயல்பாடுகளை முன்னெடுக்க எனக்கு உறுதுணையாகச் செயல்படுவார். மேலும், கூடுதலாக ஈரோடு, கோயம்புத்தூர், திருப்பூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களுக்கு அமைப்புச் செயலாளராகவும் நியமிக்கப்படுகிறார். என்னோடும், பொதுச்செயலாளருடனும் கலந்தாலோசித்து கழகப் பணிகளை மேற்கண்ட மாவட்டங்களில் மேற்கொள்வார்.