தமிழகத்தில் மதியம் 1 மணி வரை 8 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு!!
By : King 24x7 Desk
Update: 2024-05-21 06:23 GMT
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் மற்றும் சுற்றுவட்டடாரப் பகுதிகளில் இன்று மாலை முதல் கொட்டித் தீர்த்த கனமழையால் சாகுபடி பாதிப்படைந்தது.
குமரிக்கடல் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதன் காரணமாக சென்னை, செங்கபட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், மயிலாடுதுறை, கடலூர், திருவள்ளூர், கன்னியாகுமரி மாவட்டங்களில் மதியம் 1 மணிக்குள் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து காற்றழுத்த தாழ்வுபகுதி உருவாகும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்து. இந்த காற்றழுத்த தாழ்வுபகுதி உருவாகி மத்திய வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற்றவுள்ளது.