நெல்லையில் ஆளுநருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்: 11பேர் கைது!!
By : King 24x7 Desk
Update: 2024-10-25 11:49 GMT
ஆளுநருக்கு எதிராக இந்திய மாணவர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்ற நிலையில் 11 பேர் கைது செய்யப்பட்டனர். சிண்டிகேட் உறுப்பினராக ஏபிவிபி தென்மாநில தலைவர் சவீதா ராஜேஷை நியமித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். நாளை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை கழக பட்டமளிப்பில் பங்கேற்க இன்று நெல்லைக்கு வரும் ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் சங்கத்தினர் ஆளுநருக்கு எதிராக கோஷங்களை எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.