ஒரேநாளில் 25 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்!!
By : King 24x7 Desk
Update: 2024-10-26 06:05 GMT
bomb threat
நாடு முழுவதும் கடந்த சில தினங்களாக விமானங்களுக்கு சமூக ஊடகங்கள் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்றும் 25 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இந்த போலி வெடிகுண்டு மிரட்டல்கள் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வந்தாலும் விமான பயணிகளிடையே பாதுகாப்பு குறித்த அச்சத்தை எழுப்பி உள்ளது.