நிதி நிறுவனங்கள், அடகு கடைகள் ரூ.20,000 மேல் ரொக்கமாக கடன் தரக்கூடாது: ரிசர்வ் வங்கி

Update: 2024-05-16 15:16 GMT

RBI

நிதி நிறுவனங்கள் தங்களின் வாடிக்கையாளர்களுக்கு ரூ.20,000-க்கும் மேல் கடனை பணமாக வழங்கக் கூடாது என்று கட்டுப்பாடு விதித்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி, வங்கியல்லாத நிதி நிறுவனங்களுக்கு (என்பிஎப்சி) புதிய சுற்றறிக்கையை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, ‘வருமான வரிச் சட்டம், 1961-ன் பிரிவு 269 எஸ்எஸ் விதியின்படி, ஒரு நபர் 20,000 ரூபாய்க்கும் மேல் கடனை பணமாக பெற முடியாது என்று உத்தரவிட்டுள்ளது. ரிசர்வ் வங்கியின் இந்த புதிய உத்தரவால், நடுத்தர மக்கள் தங்களிடம் இருக்கும் நகைகளை நிதி நிறுவனங்களில் அல்லது அடகு கடைகளில் வைத்து எளிதாக கடன் பெறமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

Similar News