பள்ளிக் கல்வித் துறைக்கு ரூ.46,767 கோடி நிதி ஒதுக்கீடு: பட்ஜெட்டில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு
By : King 24x7 Desk
Update: 2025-03-14 05:54 GMT
thangam thennarasu
தமிழக அரசு 2025-2026ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை அறிவித்துள்ளது. சட்டமன்றத்தில் நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டை அறிவித்தார். அதில், பள்ளிக் கல்வித் துறைக்கு ரூ.46,767 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என பட்ஜெட்டில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். உயர்கல்வித் துறைக்கு ரூ.8,494 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறைக்கு ரூ. 578 கோடி; மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு ரூ.21,906 கோடி பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.