2026 தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தோல்வி அடைவது உறுதி: டிடிவி தினகரன்
By : King 24x7 Desk
Update: 2025-09-17 08:21 GMT
டிடிவி தினகரன்
2026 தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தோல்வி அடைவது உறுதி என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். "நேற்று வீரவசனம் பேசிய எடப்பாடி பழனிசாமி, இப்போது அமித் ஷாவை சந்தித்துள்ளார். அமித் ஷாவை சந்தித்த எடப்பாடி முகத்தை மூடிகொண்டு வரவேண்டிய அவசியம் என்ன?. இன்று முதல் எடப்பாடி, முகமூடியார் பழனிசாமி என்று அழைக்கப்படுவார். 2026 தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தோல்வி அடைவது உறுதி" என சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.