ஏர்லைன்ஸ்களில் கலக்கும் ஏஐ; பயணிகளுக்கு மனிதர்களை போலவே பதில் தரும் பாட்கள்: வாடிக்கையாளர் சேவையில் புதுமை
விமான நிறுவனங்களில் வாடிக்கையாளர் சேவைப் பிரிவை செயற்கை நுண்ணறிவு மொத்தமாக கபளீகரம் செய்துள்ளது. மனிதர்களைப் போலவே பயணிகளின் கேள்விகளுக்கு பாட்கள் பதிலளித்து வருகின்றன.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்படும் சாட்பாட்கள் வாடிக்கையாளர் சேவைப் பிரிவில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளன. அந்த வகையில் விமான நிறுவனங்களின் வாடிக்கையாளர் சேவைப் பிரிவை ஏஐ தொழில்நுட்பம் மொத்தமாக கபளீகரம் செய்துள்ளது. இந்தியாவில் விமான பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான தொழில் துறை ஏற்றத்துடன் இருக்கிறது. இந்தநிலையில், வாடிக்கையாளர் சேவைப் பிரிவில் இந்திய ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் முழுக்க முழுக்க சாட்பாட்களை நம்பத் தொடங்கி உள்ளன. ஏர் இந்தியா நிறுவனம் தனது ஏஐ.ஜி மூலம் 1,300 தலைப்புகளில் வாடிக்கையாளர்களின் பலவிதமான கேள்விகளுக்கு பதிலளிக்கும் வசதிகளை புகுத்தி உள்ளது.