32.72 சதவீத பங்குகளை வாங்கி இந்தியா சிமென்ட்சை கைப்பற்றியது அல்ட்ராடெக்
By : King24x7 Rafi
Update: 2024-07-29 14:20 GMT
cement
இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்தை ஆதித்யா பிர்லா குழுமத்தின் அல்ட்ராடெக் நிறுவனம் கையகப்படுத்தி உள்ளது. கடந்த ஜூன் மாதம் ஒரு பங்கிற்கு ரூ.268 என்ற விலையில் இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்தின் 22.77 சதவீத பங்குகளை அல்ட்ராடெக் நிறுவனம் வாங்கியது. அதைத் தொடர்ந்து தற்போது இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர்கள் மற்றும் அவர்களின் கூட்டாளர்களிடம் இருந்து 32.72 சதவீத பங்குகளை ரூ.3,954 கோடியில் வாங்க ஒப்பந்தம் செய்துள்ளது. இதற்கான அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டது.