பரந்தூர் விமான நிலைய திட்டம்; கூடுதல் நிலம் கையகப்படுத்த தமிழ்நாடு அரசு அனுமதி
By : King24x7 Rafi
Update: 2024-06-10 06:48 GMT
147.11 ஏக்கர் நிலம் கையகப்படுத்த அனுமதி ஆணை வெளியிடப்பட்டுள்ளது. எடையார்பாக்கம் கிராமத்தில் 147.11 ஏக்கர் நிலம் கையகப்படுத்த தமிழ்நாடு அரசு அனுமதி ஆணை வெளியிட்டது.நிலம் குறித்த பாத்தியத்தை உள்ளவர்கள் 30 நாட்களுக்குள் தனி மாவட்ட வருவாய் அலுவலரிடம் புகார் அளிக்கலாம். ஆட்சேபனைகள் மீதான விசாரணை ஜூலை மாதம் 22 மற்றும் 23-ம் தேதி மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.