புத்த பூர்ணிமாவை முன்னிட்டு ஜிப்மர் மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவு இயங்காது

Update: 2024-05-21 12:04 GMT

Jipmer

மத்திய அரசு விடுமுறை தினமான 23.05.2024 அன்று புத்த பூர்ணிமாவை முன்னிட்டு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவு இயங்காது என நிர்வாகம் அறிவித்துள்ளனர். நோயாளிகள் மருத்துவமனைக்கு வருவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. எனினும் அவசரபிரிவு சேவைகள் அனைத்தும் வழக்கம் போல் இயங்கும் என்று அறிவித்துள்ளனர்.

Similar News