செய்திஇந்தியாநெல்லுக்கான ஆதார விலையை உயர்த்தும் மத்திய அரசு?..
By : King24x7 Rafi
Update: 2024-06-10 06:32 GMT
நெல்லுக்கான ஆதார விலையை உயர்த்த ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜனாதிபதி மாளிகையில் நேற்று கோலாகலமாக நடந்த பதவி ஏற்பு விழாவில், தொடர்ந்து 3வது முறையாக மோடி பிரதமராக பதவி ஏற்றுக் கொண்டார். அவரைத் தொடர்ந்து, 30 கேபினட் அமைச்சர்களும், தனி பொறுப்புடன் கூடிய 5 இணை அமைச்சர்களும், 36 இணை அமைச்சர்களும் பதவி ஏற்றனர். அமைச்சர்கள் மற்றும் இணை அமைச்சர்களுக்கான துறைகள் இன்று அறிவிக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.