பாடல்கள் மீது இளையராஜா எந்த உரிமையும் கோர முடியாது: சென்னை உயர்நீதிமன்றத்தில் எக்கோ நிறுவனம் வாதம்
By : King24x7 Rafi
Update: 2024-06-14 04:22 GMT
பாடல்கள் மீது இளையராஜா எந்த உரிமையும் கோர முடியாது என சென்னை உயர்நீதிமன்றத்தில் எக்கோ நிறுவனம் தெரிவித்துள்ளது. இசையமைப்பாளர் இளையராஜாவின் 4500 பாடல்களை பயன்படுத்துவதற்கு எக்கோ மற்றும் அகி உள்ளிட்ட இசை நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்திருந்தன. ஆனால் இந்த ஒப்பந்தம் கடந்த 2014 ஆம் ஆண்டுடன் முடிந்த நிலையில் காப்புரிமை பெறாமல் தனது பாடல்களை பயன்படுத்துவதாக இரு நிறுவனங்களின் மீதும் இளையராஜா வழக்கு தொடர்ந்தார்.