நடப்பாண்டில் முறைகேடுகளுடன் நடைபெற்ற நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்: செல்வப்பெருந்தகை அறிக்கை
By : King24x7 Rafi
Update: 2024-06-08 01:48 GMT
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் 3 லட்சத்து 41 ஆயிரம் மாணவர்கள் படிக்கிறார்கள். இதில் கடந்த 2017 முதல் 2020 வரை, மூன்றாண்டுகளில் திணிக்கப்பட்ட நீட் தேர்வின் மூலம் 13 மாணவர்கள் மட்டுமே மருத்துவ கல்லூரிகளில் சேருகிற கொடுமை நிகழ்ந்தது. உள்ஒதுக்கீடு 7.5 சதவிகிதம் வந்த பிறகு மொத்தமுள்ள 5567 இடங்களில் 435 மாணவர்களுக்குத் தான் மருத்துவ படிப்பில் சேருகிற வாய்ப்பு கிடைத்தது.