திருவள்ளூர் – ஸ்ரீபெரும்புதூர் நெடுஞ்சாலையில் ஊராட்சி மன்ற அலுவலகம் எதிரில் வேகத்தடை அமைக்க கோரிக்கை
By : King 24x7 Angel
Update: 2024-11-28 05:02 GMT
திருவள்ளூர் – ஸ்ரீபெரும்புதூர் நெடுஞ்சாலையில் மேல்நல்லாத்தூர் ஊராட்சி மன்ற அலுவலகம் எதிரில் வேகத்தடை இல்லாததால் தொழிற்சாலை பேருந்துகள், அரசு பேருந்துகள், கல்லூரி பேருந்துகள் உள்பட அனைத்து வாகனங்களும் வேகமாக சென்று வருகின்றன. இதனால் எதிர்பாராத விதமாக அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு மாணவ, மாணவிகள் காயம் அடைகின்றனர். ஒரு சில நேரங்களில் உயிரிழப்புகளும் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே மேல்நல்லாத்தூர் ஊராட்சி மன்றம் அலுவலகம் எதிரில் விபத்துகளை தவிர்க்க ஏதுவாக வேகத்தடையை அமைத்திட வேண்டும் என அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.