2024 செஸ் ஒலிம்பியாட்: இந்தியா இன்று சீனாவுடன் பலபரீட்சை !!

Update: 2024-09-18 07:20 GMT

செஸ் ஒலிம்பியாட் போட்டி

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் நடந்து வருகிறது. 11 சுற்றுகள் கொண்ட இந்த தொடரில் நேற்று முன்தினம் நடந்த 6-வது சுற்றில் இந்திய ஆண்கள் அணி 3-1 என்ற கணக்கில் ஹங்கேரியை தோற்கடித்தது.

தொடர்ந்து 6 சுற்றுகளிலும் வெற்றிகளை குவித்த இந்தியா 12 புள்ளிகளுடன் நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறது. போட்டியில் நேற்று ஓய்வு நாளாக இருந்த நிலையில் இன்று நடைபெறும் 7-வது சுற்றில் இந்திய ஆண்கள் அணி, 11 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ள சீனாவை எதிர்கொள்கிறது.

இன்றைய ஆட்டத்தில் குகேஷ், உலக சாம்பியன் சீனாவின் டிங் லிரென் இடையிலான மோதல் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் இவர்கள் இருவர் தான் நவம்பர்- டிசம்பரில் உலக செஸ் சாம்பியன்ஷிப்பில் நேருக்கு நேர் மோத இருக்கிறார்கள்.

அதனால் இன்றைய ஆட்டத்தில் யார் வெற்றி பெறுவார் என செஸ் பிரியர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். பெண்கள் பிரிவிலும் இந்திய அணியே ஆதிக்கம் செலுத்துகிறது. 6 ஆட்டங்களிலும் வெற்றி கண்டு 12 புள்ளிகளுடன் பட்டியலில் முதலிடம் வகிக்கும் இந்தியா 7-வது சுற்றில் ஜார்ஜியாவுடன் (11 புள்ளி) மோதுகிறது. இந்த இரண்டு ஆட்டங்களும் இந்திய நேரப்படி மாலை 6.30 மணிக்கு தொடங்குகிறது.

Tags:    

Similar News