பிளேஆப் சுற்று மூன்று இடத்துக்கு 6 அணிகள் போட்டி !!!
ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த மார்ச் மாதம் 22ஆம் தேதி தொடங்கியது. இதில் பத்து அணிகள் பங்கேற்று ஆடி வருகின்றனர் ஒவ்வொரு அணியும் 14 ஆட்டங்களில் மோத வேண்டும். லீக் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் அஹமதாபாத்தில் குஜராத் ஐட்டம்ஸ் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோத வேண்டிய 63 வது ஆட்டம் மழையால் ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது.
இதனால் குஜராத் அணி பிளே ஆப் சுற்று வாய்ப்பை இழந்து வெளியேற்றப்பட்டது. ஏற்கனவே ஐந்து முறை சாம்பியன் ஆன மும்பை இந்தியன்ஸ் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் வாய்ப்பு இழந்து இருந்தன. 11 புள்ளிகளுடன் இருக்கும் குஜராத் கடைசி போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் வருகின்ற 16ஆம் தேதி எதிர்கொள்கிறது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 19 புள்ளிகள் உடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அந்த அந்த அணி 'டாப்2' இடத்தை பிடிப்பது உறுதியாகிவிட்டது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ்சுக்கு இன்னும் ஒரு ஆட்டம் உள்ளது.
ஐபிஎல் போட்டியில் இதுவரை 63 ஆட்டங்கள் முடிந்துள்ளன. இன்னும் ஏழு லீக் போட்டிகள் எஞ்சியுள்ளன கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது மூன்று அணிகள் வெளியேற்றப்பட்டன. பிளே ஆப் சுற்றில் நுழைய மூன்று இடத்துக்கு ஆறு அணிகள் போட்டியில் உள்ளன.
டெல்லி லக்னோ இடையே இன்று நடைபெறும் ஆட்டத்தில் டெல்லி அணி தோற்றால் போட்டியிலிருந்து வெளியேற்றப்படும் பிளே ஆப் சுற்றுக்கான போட்டியில் உள்ள அணிகள் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயலர்ஸ் 16 புள்ளிகளுடன் இருக்கிறது.
பஞ்சாப் கொல்கத்தா அணிகளுடன் மோத வேண்டி உள்ளது. இந்த 2 தோற்றாலும் அந்த அணியின் பிளே ஆப் சுற்று வாய்ப்பு பாதிக்காது. ஏனென்றால் அந்த அணியின் ரன் ரேட் அதிகமாக உள்ளது. முதல் இரண்டு இடங்களை பிடிக்க ஏதாவது ஒரு ஆட்டத்தில் வெற்றி பெற முயற்சிக்கும் 14 புள்ளிகளுடன் இருக்கும் ருதுராஜ் கொய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் கடைசி ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 18 ஆம் தேதி சந்திக்கிறது.
இதில் வெற்றி பெற்றால் பிலே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று விடும் ஏனென்றால் ரன் ரேட் நன்றாக இருக்கிறது. பெங்களூரிடம் தோற்றாலும் அந்த அணியை விட ரன்ரேட் குறைந்து விடாமல் பார்க்க வேண்டும்.
சிஎஸ்கே விளையாடிய பிறகுதான் ஹைதராபாத் அணி கடைசி லீக்கில் விளையாடுகிறது. இதனால் பிளே ஆப் சுற்றில் நுழைய பெங்களூர் அணியில் வீழ்த்துவது கட்டாயமாக உள்ளது. 14 புள்ளிகளுடன் இருக்கும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்துக்கு இன்னும் இரண்டு ஆட்டம் உள்ளது. குஜராத்துடனும் பஞ்சாப் உடனும் 19 தேதி மோத இருக்கிறது.
இதில் ஒரு வெற்றியைப் பெற்றாலே கம்மின்ஸ் தலைமையிலான அந்த அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் அந்த அணியின் ரன் ரேட் லக்னோவை விட சிறப்பாக இருக்கிறது. இரண்டு போட்டியிலும் வெற்றி பெற்றால் டாப் 2 இடத்துக்கான போட்டிக்கு வரும் போட்டியில் தோற்றால் பாதிப்பு ஏற்படும். அதே நேரத்தில் கடைசி லீக்கில் ஆடுவதால் அதற்கு ஏற்றவாறு விளையாடும். இதனால் அந்த அணி தகுதி பெறுவதற்கான வாய்ப்பு இருக்கிறது.
டுபெலிசிஸ் தலைமையிலான தலைமையிலான பெங்களுரு அணி தொடர்ச்சியாக 5 ஆட்டத்தில் வென்று முத்திரை பதித்தது. கடைசி லீக்கில் சென்னையை வீழ்த்தினால் 14 புள்ளிகளை பெறும். அதே நேரத்தில் ஐதராபாத்தும், லக்னோவும் 16 புள்ளிகளை எடுத்தால் வாய்ப்பை இழந்துவிடும்.
சென்னையுடன் மோதும் போட்டி நாக் அவுட் ஆகும் வகையில் மற்ற முடிவுகள் இருந்தால் பெங்களூர் அணி 18 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற (200 ரன் எடுத்தல்) வேண்டும் அப்படி நடந்தால் சென்னையை விட ரன்ரேட்டில் முன்னிலை பெறும்.
12 புள்ளியுடன் இருக்கும் லக்னோ எஞ்சிய ஆட்டங்களில் டெல்லி, மும்பையுடன் மோத வேண்டும். ரன் ரேட் மோசமாக இருப்பதால் 16 புள்ளிகள் பெற இரண்டு ஆட்டத்திலும் வெற்றி பெற வேண்டும்.அதே நேரத்தில் சென்னை, ஐதராபாத் அணிகளும் 16 புள்ளியை எடுக்கும் போது ரன் ரேட் முக்கிய பங்கு வகிக்கும்.
லக்னோவின் ரன் ரேட்-0.769 ஆகும். 12 புள்ளிகளுடன் இருக்கும் ரிஷப்பண்ட் தலைமையிலான டெல்லி இன்றைய ஆட்டத்தில் லக்னோவிடம் ரன் ரேட்-0.769 ஆகும். 12 புள்ளிகளுடன் இருக்கும் ரிஷப்பண்ட் தலைமையிலான டெல்லி இன்றைய ஆட்டத்தில் லக்னோவிடம் தோற்றால் வெளியேறிவிடும்.
மேலும் வெற்றி பெற்றாலும் பிளேஆப் வாய்ப்பை பெறுவது மிகவும் கடினம். ஏனென்றால் ஐதராபாத், சென்னை அணிகளுடன் ஒப்பிடுகையில் ரன்ரேட் குறைவாக இருக்கிறது. லக்னோவுக்கு எதிராக மிகப்பெரிய வெற்றியை பெற வேண்டும் அது சாத்தியமற்றது.