எமர்ஜிங் ஆசிய கோப்பையை வென்ற ஆப்கானிஸ்தான் !!

Update: 2024-10-28 07:00 GMT

Afghanistan wins Emerging Asia Cup 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் ஓமனில் நடைபெற்று வந்தது. 8 அணிகள் பங்கேற்ற இந்த தொடரில் குரூப் Aல் இலங்கை A, ஆப்கானிஸ்தான் A அணிகளும், குரூப் Bல் இந்தியா A, பாகிஸ்தான் A அணிகளும் அரையிறுதிக்கு தகுதி பெற்ற நிலையில் யுஏஇ, ஓமன், வங்காளதேசம், ஹாங்காங் ஆகிய அணிகள் தொடரிலிருந்து பரிதாபமாக வெளியேறின.

அரையிறுதி போட்டியில் இலங்கை அணி, பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்கு களமிறங்கியது. அதே போல் ஆப்கானிஸ்தான் அணி, இந்திய அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியது.

இரு அணிகளுக்கிடையேயான இறுதி போட்டி நேற்று அல் அமேரத்தில் சிறப்பாக நடந்தது. இதில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 133 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சஹன் ஆராசிகே 64 ரன்கள் எடுத்தார்.

134 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 18.1 ஓவரில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 134 ரன்கள் குவித்து இலங்கையை 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றது. எமர்ஜிங் ஆசிய கோப்பையையும் வென்று அசத்தியது.

Tags:    

Similar News