ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி - இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இந்தியா !!!

Update: 2024-09-17 05:30 GMT

ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

ஹூலுன்பியர்: ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடர் சீனாவில் உள்ள ஹுலுன்புயர் நகரில் நடைபெற்று வருகிறது.

இதன் அரை இறுதி ஆட்டத்தில் நேற்று இந்தியா - தென் கொரியா அணிகள் மோதிய நிலையில் 4-1 என்ற கோல் கணக்கில் கொரியாவை வீழ்த்தியது.

லீக் சுற்றில் தொடர்ச்சியாக 5 வெற்றிகளைப் பதிவு செய்து அசத்திய இந்தியா, அரையிறுதியில் நேற்று கொரியாவை சந்தித்தது.

தொடக்கத்தில் இருந்தே ஒருங்கிணைந்து விளையாடி கொரிய கோல் பகுதியை முற்றுகையிட்ட இந்திய அணிக்கு உத்தம் சிங் 13வது நிமிடத்தில் முதல் கோல் அடித்து முன்னிலை கொடுத்தார்.

கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் 19வது மற்றும் 45வது நிமிடத்திலும், ஜர்மன்பிரீத் சிங் 32வது நிமிடத்திலும் கோல் போட்டு அசத்தினர். இந்தியா, இறுதிப் போட்டியில் இன்று சீனாவுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.

Tags:    

Similar News