ஆசிய சாம்பியன்ஸ் டிராபி: கொரியாவை வீழ்த்திய இந்தியா !!

Update: 2024-09-13 07:30 GMT

ஆசிய சாம்பியன்ஸ் டிராபி

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி போட்டி சீனாவின் ஹூலுன்பியர் நகரில் நடந்து வரும் நிலையில் இதில் பங்கேற்றுள்ள 6 நாடுகளும் ரவுண்டு ராபின் முறையில் தலா ஒரு முறை மோதவேண்டும்.

லீக் முடிவில் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும். அரையிறுதி போட்டி16-ம் தேதியும், இறுதிப்போட்டி 17-ம் தேதியும் நடக்கும் என தெரிவித்துள்ளது.

இந்திய அணி முதல் ஆட்டத்தில் சீனாவை 3-0 என்ற கோல் கணக்கிலும், 2-வது ஆட்டத்தில் ஜப்பானை 5-1 என்ற கோல் கணக்கிலும், 3வது ஆட்டத்தில் மலேசியாவை 8-1 என்ற கோல் கணக்கிலும் வீழ்த்தியது.

இந்நிலையில், இந்திய அணி 4-வது ஆட்டத்தில் நேற்று கொரியாவுடன் மோதியது. இந்த ஆட்டத்தில் இந்தியா 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. எனவே அரையிறுதி போட்டிக்கு இந்திய அணி முன்னேறியது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News