இந்தியாவை வீழ்த்தி 59 ரன் வித்தியாசத்தில் வங்கதேசம் கோப்பையை வென்றது !!

Update: 2024-12-09 06:21 GMT

வங்கதேசம் 

ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் 19 வயதுக்கு உட்பட்டோர் மோதும் ஒரு நாள் போட்டிகள் 8 நாடுகள் இடையே ஐக்கிய அரபு எமிரேட்சில் நடந்து வந்தன.

துபாயில் நேற்று நடந்த இறுதிப் போட்டியில் இந்தியா – வங்கதேசம் அணிகள் மோதிய நிலையில் டாஸ் வென்ற இந்தியா பீல்டிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம், 49.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 198 ரன் எடுத்தது.

இதையடுத்து, 199 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நிர்ணயித்த இந்தியா துவக்க வீரர்கள் ஆயுஷ் மாத்ரே 1, வைபவ் சூர்யவன்ஷி 9 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி தந்தனர். பிற வீரர்களும் சொற்ப ரன்களில் வீழ்ந்தனர்.

இறுதியில், 35.2 ஓவர் முடிவில் இந்திய அணி எல்லா விக்கெட்டுகளையும் இழந்து 139 ரன் எடுத்தது. இதனால் 59 ரன் வித்தியாசத்தில் இந்தியா தோற்றது. இதையடுத்து ஆசிய கோப்பையை வங்கதேசம் பெற்றது.

Tags:    

Similar News