இந்திய அளவில் பென்சாக் சிலாட் போட்டி - தமிழ்நாட்டை சேர்ந்த சிவமித்ரா சாதனை !!
By : King 24x7 Angel
Update: 2024-11-23 06:24 GMT

பென்சாக் சிலாட் போட்டி
அகில இந்திய அளவில் பென்சாக் சிலாட் போட்டி ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் பகுதியில் நடைபெற்றது.
இந்த போட்டியில் தமிழ்நாட்டின் சார்பாக மாணவி சிவமித்ரா அமிர்தவல்லி கலந்து கொண்டார். மேலும் இந்திய அளவில் பென்சாக் சிலாட் போட்டியில் சிவமித்ரா இந்த போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
இதனை தொடர்ந்து டிசம்பர் மாதம் துபாயில் நடக்க இருக்கும் பென்சாக் சிலாட் உலகளாவிய சாம்பியன்ஷிப் போட்டியில் சிவமித்ரா பங்கேற்பதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.