பாரதிதாசன் பல்கலைக்கழகங்களுக்கு இடையே ஆண்களுக்கான கோகோ போட்டி
பாரதிதாசன் பல்கலைக்கழகங்களுக்கு இடையே ஆண்களுக்கான கோகோ போட்டி;
By : King 24x7 Website
Update: 2023-12-21 05:41 GMT
பாரதிதாசன் பல்கலைக்கழகங்களுக்கு இடையே ஆண்களுக்கான கோகோ போட்டி
பொன்னமராவதி அருகே மேல சிவபுரி கணேசன் கல்லூரியில் பாரதிதாசன் பல்கலைக்கழகங்களுக்கு இடையே ஆண்களுக்கான கோகோ போட்டி நடந்தது. கல்லூரி குழு தலைவர் சாமிநாதன் தலைமை வகித்தார். செயலர் சாமிநாதன் முன்னிலை வகித்தார். கோகோ போட்டியை பொன்னமராவதி தாசில்தார் சாந்தா தொடங்கி வைத்தார். போட்டியில் திருச்சி ,நாகை, அரியலூர், கரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களை சேர்ந்த 18 கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் வார்ப்பட்டு விஏஓ விஜயா, பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். போட்டியை கல்லூரி உடற்கல்வி இயக்குனர் சுரேஷ்குமார் ஒருங்கிணைத்தார். முதல்வர் பழனியப்பன் வரவேற்றார்.